ஜெய்ஷா, கங்குலியின் பிசிசிஐ பதவி நீட்டிக்கப்படுமா? உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி:

பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா (அமித்ஷாவின் மகன்) ஆகியோரின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதமே  முடிந்த நிலையில் அவர்களுக்குப் பதவி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா அல்லது பதவியிலிருந்து விலகுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி தலைமையான பிசிசிஐ, மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவது வழக்கமாகவே உள்ளது. இதையடுத்துதான், உச்சநீதி மன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பிசிசிஐ நிர்வாகத்தில், தலையிட்டு, பிசிசிஐ-ல் அதிரடி மாற்றங் களைக்கொண்டு வந்தது. இருந்தாலும், பிசிசிஐ  மீண்டும் ஆளும்கட்சியின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையிலேயே பிசிசிஐ அதிகாரிகள் நியமனங்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு  அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலியும், செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷாவும் பதவி ஏற்றனர்.

அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஏற்கனவே குஜராத் கிரிக்கெட் அமைப்பில்  5 ஆண்டுகள் பதவி வகித்திருந்தால், அவரது பதவிக்காலம் பிசிசிஐ-ல் 10 மாதங்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும். இருந்தாலும், அவர்  பிசிசிஐ செயலாளராகப் பதவி ஏற்றார்.   10 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். அந்த வகையில் அவரின் பதவிக் காலம் ஜூலை 27-ந்தேதி தேதியுடன் முடிவடைந்தது.

அதுபோல பிசிசிஐ தலைவராக இருக்கும், சவுரவ் கங்குலியும், ஏற்கனவே  மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தில் கங்கு 5 ஆண்டுகள் பதவி வகித்து விட்டதால், பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப் பட்டபின் 10 மாதங்கள் மட்டுமே அதில் இருக்க முடியும். அந்த வகையில் கங்குலியின் பதவிக் காலம் இன்றுடன் மே 7ந்தேதியுடன்  முடிவடைகிறது.

இதனால் காரணமாக அவர்கள் இனிமேல் 3 ஆண்டுகள், பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கம் என எந்தவொரு சங்கத்திலும் பதவி வகிக்க முடியாது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு (2019)  டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட, பிசிசிஐ பொதுக்கூட்டத்தில், கங்குலி, ஜெய்ஷா போன்றவர்களின் பதவி நீட்டிப்புக்கு ஆதரவாக விதிகளில்  திருத்தம் கொண்டு வந்தனர்.  அதன்படி  அவர்கள் இருவரும் தங்களின் 3 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்யும் வகையில்,   2024-ம் ஆண்டுவரை பதவியில் தொடரும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, தீர்மானத்தை அமல்படுத்தும் வகையில், பிசிசிஐ விதிகளில் திருத்தம் செய்ய அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டடது.

இந்த மனு மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, அடுத்த விசாரணையை ஆகஸ்டு 17-ம்தேதிக்கு ஒத்திவைத்தது. இதனால், கங்குலி ஜெய்ஷா ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெய்ஷா, கங்குலி மீதான வழக்கு விசாரணை இன்று (ஆகஸ்டு 17ந்தேதி) உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

பிசிசிஐ விதிப்படி,   தலைவர், செயலாளர் பதவியை அதிகபட்சமாக 45 நாட்கள் வரை மட்டுமே காலியாக வைத்திருக்க இருக்க முடியும். அதற்குள் புதிய தலைவரை, செயலாளரை நியமிக்க வேண்டும் என பிசிசிஐ விதிமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.