கொல்கத்தா: பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தற்போது கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை பற்றி பிரபல கிரிக்கெட் செய்தியாளர் போரியா மஜூம்தார் ட்விட்டரில் தெரிவித்ததாவது: ஜிம்மில் கங்குலி இருக்கும் போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு  உள்ளது.

உடடினயாக உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்பாது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். நலம்பெற அவரை வாழ்த்துகிறேன் என்று கூறி உள்ளார்.

கங்குலி உடல்நலம் பெற வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: லேசான நெஞ்சு வலி காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன்.

விரைவில் அவர் குணம் அடைந்து வீடு திரும்புவார். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.