ஈடன் கார்டன்ஸ் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்து இணையத்தை வென்ற சவுரவ் கங்குலி!

புதுடில்லி: பகல் / இரவு டெஸ்ட் போட்டியை நிஜமாக்கியதற்காக கொல்கத்தா மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார்  சவுரவ் கங்குலி.  போட்டி நடந்து கொண்டிருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நிரம்பி வழிந்த கூட்டத்துடன் அவர் எடுத்துக் கொண்ட ஒரு செல்ஃபி இணையத்தைக் கலக்கி வருகிறது.

கங்குலி, புதிதாக நியமிக்கப்பட்ட பி.சி.சி.ஐ தலைவர். இந்த சந்தர்ப்பத்தை ஒரு முக்கியமான நிகழ்வாக மாற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். எனவே, அரங்கத்தில் ஆர்வமுள்ள ரசிகர்களுடன் ஒரு புகைப்படத்தைக் கிளிக் செய்வதற்கான வாய்ப்பை விட்டுவிடவில்லை.

டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் பெரும் சாதனை நிகழ்ந்தது மேலும், அன்றைய முதல் பந்து வீசப்பட்டபோது அரங்கம் மேற்கூரை சட்டங்கள் வரை நிரம்பி வழிந்தது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்திய மற்றும் வங்கதேச வீரர்களை வாழ்த்தினர்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் முடிவெடுத்தார் வங்கதேச கேப்டன் மோமினுல் ஹக். ஆனால் இந்த செயல் ஒரு மோசமான  எதிர்விளைவை சந்தித்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வங்கதேச பேட்டிங்  வரிசையை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டனர்.

இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரின் மூச்சிலும் அனல் பறந்தது.  மதிய உணவு வேளையில்  வங்கதேசத்தை 6 விக்கெட்டுக்கு 73 ஆக குறைத்தனர்.

“மிக மகிழ்ச்சியாக உணர்கிறோம். நாங்கள் எங்கள் கடமையை நிறைவேற்றுகிறோம்“, என்றார் இந்திய கேப்டன் விராட் கோலி.