டில்லி

டுத்த மாதம் அளிக்கப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதியதாக பதவி ஏற்றுள்ள மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பு ஏற்றுள்ளார்.   அவர் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அடுத்த மாதம் ஐந்தாம் தேதி மக்களவையில் அளிக்க உள்ளார்.  அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.   இந்த ஏற்பாடுகள் ரகசியமாக நடைபெற்று வருகின்றன.

ஆயினும் ஒரு சில விஷயமறிந்த வட்டாரங்கள் இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளனர்.  அதன்படி தனியார் வருமான வரிக்கான வரம்பு தற்போதுள்ள ரூ.2,50,000 ரூபாயில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.    அதற்கு மேல் உள்ள வருமானத்துக்கான வரி விகிதங்கள் உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தற்போது இந்திய பொருளாதாரம் மிகவும் கீழே சென்றுள்ளதால் அரசுக்கு போதிய வருமானத்தை ஈட்ட இந்த வரி விகித உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.  அது மட்டுமின்றி வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள பல இனங்கள் ரத்து செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.  இதன் மூலம் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு குறைந்தது ரூ.2500 வரை அதிக வருமான வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

தற்போது வருமான வரி சட்டம் பிரிவு 80சி யின் கீழ் சேமிப்புக்களுக்கான வரிக்கான உச்சவரம்பு ரூ.1,50,000 ஆக உள்ளது.   அவை இன்னும் அதிகரிக்கப்படலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ள்ன.     இந்த விவரங்கள் ரகசியமானவை என்பதால் இது குறித்து நிதி அமைச்சக செய்தி தொடர்பாளர் மாலிக் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.