அஜித் படத்தில் தொலைகாட்சி பிரபலம் ரங்கராஜ் பாண்டே அறிமுகமா? 

சென்னை

ஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள பிங்க் இந்திப்படத்தின் தமிழ் வடிவில் தொலைக்காட்சி பிரபலம் ரங்கராஜ்  பாண்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது..

தொலைக்காட்சியில் அரசியல் வாதிகளை பேட்டி காண்பதில் ரங்கராஜ் பாண்டே மிகவும் புகழ் அடைந்தவர் ஆவார்.   பல அரசியல் பிரமுகர்களை அவருடைய கேள்விகளால் திக்கு முக்காட செய்துள்ளவர் ஆவார்.   ஒரு சில அரசியல்வாதிகள் அவருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி உள்ளதையும் பல தொலைக்காட்சி நேயர்கள் ரசித்துள்ளனர்.

அமிதாப் பச்சன் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற பிங்க் இந்தி திரைப்படம் தமிழில் தயாராகிறது.   இதில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.  இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.    இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த படத் தயாரிப்புக் குழுவில் உள்ள பெயர் தெரிவிக்க விரும்பாத பிரபலம் ஒருவர் இந்த செய்தியை ஆமோதித்துள்ளார்.  அவர், “இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்க உள்ளது உண்மைதான்.    பிக்க் படத்தில் பியுஷ் மிஸ்ரா நடித்த வேடத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாண்டே தனது வாதத் திறமையால் ஏற்கனவே பல தொலைக்காட்சி நேயர்களை கவர்ந்துள்ளார்.   எனவே அவர்கள் இந்த திரைப்படத்தில் ரங்கராஜ் பாண்டேவின் இயல்பான நடிப்பை மிகவும் ரசிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.