கராச்சி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 13 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு விளையாட்டுத் தொடரில் பங்கேற்க வருகை தந்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வந்த தென்னாப்பிரிக்க அணி, 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

அதன்பிறகு 2009ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, நீண்ட ஆண்டுகளாக எந்த கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் செல்லாமல் இருந்தன.

சமீபத்தில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தன. தற்போது, தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தான் வந்துள்ளது.

பாகிஸ்தானில், 2 டெஸ்ட் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூரில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தென்னாப்பிரிக்க வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.