இரண்டாவது டி20 போட்டி – ஆஸ்திரேலியாவை 12 ரன்களில் வென்ற தென்னாப்பிரிக்கா!

ஜொகன்னஸ்பர்க்: ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் 12 ரன்களில் வென்று தொடரை சமன்செய்துள்ளது தென்னாப்பிரிக்கா.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. டி காக் 47 பந்துகளில் 70 ரன்களை குவித்து பிரமாதப்படுத்தினார். வான் டெர் டுஸென் 37 ரன்களைக் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைக் எடுத்தது அந்த அணி.

பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், வார்னர் 67 ரன்கள‍ையும், ஸ்டீவ் ஸ்மித் 29 ரன்களையும் அடித்தனர்.

மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதனால், 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து 12 ரன்களில் தோல்வியடைந்தது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. கோப்பை யாருக்கு என்பது மூன்றாவது போட்டியில் தெரியவரும். தென்னாப்பிரிக்காவின் லுங்கி கிடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.