டஃப் கொடுக்கும் தென்னாப்பிரிக்கா – கைல் & ஆண்டிலே அரைசதம்..!

ஜொகன்னஸ்பர்க்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், தோல்வியை நோக்கி சென்ற தென்னாப்பிரிக்காவை, தடுத்து நிறுத்தி, வெற்றியை நோக்கி போராடி வருகின்றனர் அந்த அணியின் கைல் மற்றும் ஆண்டிலே.

321 ரன்கள் என்ற பெரிய இலக்கை விரட்டிய அந்த அணி, குறைந்த ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில், கைல் மற்றும் ஆண்டிலே நிலைத்து நின்றனர்.

தற்போதைய நிலையில், கைல் 52 பந்துகளில் 62 ரன்களுடனும், ஆண்டிலே 57 பந்துகளில் 52 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இவர்கள், இருவரும் இன்னும் அதிரடியாக ஆட வ‍ேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், தென்னாப்பிரிக்க வெற்றிக்கு, 39 பந்துகளில் 73 ரன்கள் தேவைப்படுகிறது.