சொந்த மண்ணில் டி-20 தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டியை, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், தொடரை வென்றது இங்கிலாந்து.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், எந்த பேட்ஸ்மெனும் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை.

டி காக் அடித்த 30 ரன்கள்தான் அதிகபட்ச ரன்கள். ஜார்ஜ் லிண்டே 29 ரன்களும், டுசேன் 25 ரன்களும் அடிக்க, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களே எடுத்தது அந்த அணி.

பின்னர், எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, டாவிட் மாலன் 55 ரன்கள் அடித்து கைகொடுத்தார். இயான் மோர்கன் 26 ரன்களையும், பட்லர் 22 ரன்களையும் அடிக்க, 19.5 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து வென்றதோடு, டி-20 தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து.