டெஸ்ட் கிரிக்கெட்: வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா – தாக்குப்பிடிக்குமா ஆஸ்திரேலியா?

athireliya

ஆஸ்திரேலியா – தென்ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்கியது. தென் ஆப்ரிக்கா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 63.4 ஓவர்களில் 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, 70.2 ஓவர்களில் 244 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இதனையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸ்யை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி 4-ஆவது நாளான நேற்று 160.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 540 ரன்கள் குவித்திருந்து, டிக்ளேர் செய்தனர்.

கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ்யை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஷான் மார்ஷ் 15, டேவிட் வார்னர் 35, ஸ்டீவன் ஸ்மித் 34, வோஜஸ் 1 ரன்னில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். உஸ்மான் கவாஜா அரைசதம் கடந்து 58 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 55 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இறுதிநாள் என்பதால், 370 ரன்கள் எடுத்தால் தான் ஆஸ்திரேலிய அணி வெற்றி பேர முடியும். கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளது.

கார்ட்டூன் கேலரி