ஊழல் குற்றச்சாட்டு கூறியவரை கொலை செய்த தென் ஆப்பிரிக்க ஆளும் கட்சி பிரமுகர் கைது

ஜோகன்ஸ்பர்க்:

ஊழலை வெளிப்படுத்திய தன் கட்சிக்காரரையே சுட்டுக் கொலை செய்த ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பிரமுகரை 2 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர்.

ஊழல் குற்றச்சாட்டு கூறியதால் கொலை செய்யப்பட்ட சிண்டிஸ்கோ மகாகா.

தென் ஆப்பிரிக்காவின் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் முலுலேக்கிஜுலு.

உம்ஜிம்குலு நகரில் மக்களின் பணத்தை கொள்ளையடித்ததாக இவர் மீது அதே கட்சியைச் சேர்ந்த சிண்டிஸ்கோ மகாகா குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு காரில் வந்து கொண்டிருந்த சிண்டிஸ்கோ மகாகாவை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முலுலேக்கிஜுலுவை போலீஸார் கைது செய்தனர்.