3வது ஒருநாள் போட்டி – சேஸிங்கில் தடுமாறும் தென்னாப்பிரிக்கா!

ஜொகன்னஸ்பர்க்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 321 ரன்கள் இலக்கை விரட்டும் தென்னாப்பிரிக்க அணி, 155 ரன்களுக்கு, 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

துவக்க வீரர் மாலன் 70 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மார்க்ரம் 18 ரன்களுக்கும், ஸ்மட்ஸ் 17 ரன்களுக்கும், பவுமா 20 ரன்களுக்கும், கிளாசன் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்துள்ளனர்.

கைல், 16 ரன்களில் ஆடி வருகிறார். அந்த அணி வெல்ல வ‍ேண்டுமெனில், குறைந்தபட்சம் இரு பேட்ஸ்மென்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும்.

தற்போதைய நிலையில், தென்னாப்பிரிக்க அணி 19.2 ஓவர்களில் 159 ரன்களை அடித்தாக வேண்டிய நிலை உள்ளது.

பாகிஸ்தான் தரப்பில், முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.