கேப்டவுன்: தென்னாப்பிரிக்க – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது தென்னாப்பிக்கா.

இதன்மூலம், இங்கிலாந்தைவிட 291 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்தால் மட்டுமே, தென்னாப்பிரிக்கா இந்தப் போட்டியை டிரா செய்ய வாய்ப்புள்ளது.

ஆனால், இன்று எஞ்சியுள்ள 4 விக்கெட்டுளை விரைவாக இழக்கும்பட்சத்தில், ஃபாலோ ஆன் பெற்று விளையாடும் பட்சத்தில் தோல்விக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
தென்னாப்பிரிக்க அணியில் டி காக் மட்டுமே அரைசதம்(63) அடித்து இன்னும் களத்தில் நிற்கிறார்.

தென்னாப்பிரிக்க அணியின் ஆன்ட்ரிச் நார்ட்ஜே ஆடிய இன்னிங்ஸ் மறக்க முடியாதது. 136 பந்துகளை சந்தித்த அவர், எடுத்த ரன்கள் வெறும் 18 மட்டுமே. அதில் 2 பவுண்டரிகள் அடக்கம்.

எதிரணி பவுலர்கள் எவ்வளவு நொந்திருப்பார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். கடைசியாக, இவரின் விக்கெட்டை கழற்றியவர் பென்ஸ்டோக்ஸ்.
கேப்டன் டூ ப்ளெஸி எடுத்தது வெறும் 8 ரன்கள் மடடுமே.

தற்போது டி காக் மற்றும் ஃபிளாண்டர் ஆகியோர் களத்தில் உள்ளன. இந்த ஜோடி நிலைத்து நிற்பதன் மூலமே தென்னாப்பிரிக்காவின் தலையெழுத்து தீர்மானிக்கப்படவுள்ளது.