ர்பன்

தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புது வகை கொரோனா வைரஸ் பரவலை தற்போதைய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளால் நிறுத்த முடியாது என தெரிய வந்துள்ளது

தென் ஆப்ரிக்காவில் புதிய வகை கொரோனா தொற்று கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது.  இதை கண்டறிந்த டி ஒலிவியரா என்னும் மருத்துவர் தனது சக ஊழியர்களுடன் மிகவும் பாதுகாப்பான சோதனைச் சாலையில் இது குறித்து முழ்வதுமாக ஆய்வு நடத்தினார்.  இதைப்போல் மற்றொரு மூத்த ஆய்வாளர் அலெக்ஸ் சிகல் ஜெர்மனியின் மாக்ஸ் பிளான்க் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து மேலும் ஆய்வு நடத்தி உள்ளார்.

அப்போது இந்த புதிய வகை கொரோனா ஏற்கனவே பரவி வரும் கோனா வைரசைப் போல் 10 மடங்கு வீரியமுள்ளது என தெரிய வந்துள்ளது.  ஏற்கனவே கொரோனா வந்தவர்கள் உடலில் உள்ள ஆண்டிபாடிகள் மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்கும் என்பதும் இதன் மூலம் பாதிக்கப்படோரை குணப்படுத்தலாம் என்பதும் விஞ்ஞான பூர்வமாக ஏற்கனவே தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த புதிய வகை கொரோனா பரவாமல் இந்த ஆண்டி பாடிகள் தடுக்காது என்பதும் இந்த கொரோனாவை அந்த ஆண்டிபாடிகள் குணப்படுத்தாது என்பதும் தெரிய வந்துள்ளது,.  இதன் மூலம் முதலாம் அலை கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கும் புதிய வகை கொரோனா தாக்குதல் ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டோருக்கும் இந்த புதிய வகை கொரோனா தாக்குதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.  ஏற்கனவே புதிய வகை கொரோனாவையும் இந்த தடுப்பூசிகள் கட்டுப்படுத்தும் என மதிப்பிடப்பட்டது தவறு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது.  ஆகவே தற்போதைய நிலையில் தென் ஆப்ரிக்காவைப் பொறுத்தவரையில் கொரோனா தடுப்பூசிகளால் மிகவும் பலன் குறைவு என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.