தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்து உள்ளார். இன்று முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏபி டி வில்லியர்ஸ்  ஏபிரகாம் பென்சமின் – டி – வில்லியர்ஸ் (Abraham Benjamin de Villiers)  தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் திகழ்ந்து வருபவர்.

மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை பறக்கவிடும் திறமை படைத்தவராக திகழ்வதால், இவரை 360 டிகிரி என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. அதையடுத்து நீண்ட காலம் விளையாட்டில் இருந்து ஒதுங்கியிருந்த  டி வில்லியர்ஸ், நியூசிலாந்து தொடரின்போது மீண்டும் களம் இறங்கினார். ஆனால், டி வில்லியர்ஸால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

அதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தென்னாப்பிரிக்க அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதில் டி வில்லியர்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக அவர் அணியில் நீடிப்பாரா என்ற கேள்விக்குறி எழுப்பப்பட்டது. அப்போது,  இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் டி வில்லியர்ஸ் தனது ஓய்வு குறித்துஅறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக டி வில்லியர்ஸ் ஆடி வருகிறார். இந்நிலையில், இன்று தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: South African cricketer AB de Villiers has announced his retirement from International cricket with immediate effect, தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
-=-