தென் அமெரிக்கா: ஈக்வாடரில்  நிலநடுக்கம்!

குவிட்டோ: 
தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டின் தலைநகரான குவிட்டோவில்  நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.6 பதிவான    இந்த நிலநடுக்கத்தால் குவிட்டோ நகரின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியால் வீடுகளைவிட்டு வெளியேறி, வீதிகளில் குவியத் தொடங்கினர்.

சேத விவரம் ஏதும் தெரியவில்லை.

ஏற்கனவே ஏப்ரல் மாதம் ஏற்பட்ட  நிலநடுக்ககத்தால் 673 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர்.  அப்போது  நிலநடுக்கத்தின் அளவு 7.8 ரிக்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈக்வடாரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 8 முறை சிறிய அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது.  கடந்த ஒரு வருடத்தில் 101 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.