குவிட்டோ:
குவடார் நாட்டில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
eqator-eath1
தென் அமெரிக்கவில் உள்ள ஈகுவடாரில்  நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 வரை இருந்தததாக தெரிகிறது. நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள்கு குலுங்கியது. இதனால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் நின்றனர். பெரும்பாலான கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தது.
eqator-eath
நாட்டின்  தலைநகரான குவிட்டோவுக்கு  வடகிழக்கே உள்ளது எஸ்மெரால்டஸ் நகர்.  பூமிக்கு  அடியில்  35 கிலோ மீட்டர்  ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக ஈகுவடார் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். இது ரிக்டர் அளவில் 6.4 ஆக  பதிவாகி உள்ளது. இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கமானது வடமேற்கு பகுதியான குயினிண்ட் மற்றும் முயிஸின் பகுதிகளின் அதிக சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.9 மற்றும் 6.4 என்ற அளவாக பதிவாகி உள்ளது. சேத விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை.
Ecuador-earthquake-Strong-tremors-felt-in-Esmeraldas-and_SECVPF
நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்களில் உடனே  மின்சார சப்ளை நிறுத்தப்பட்டது.  ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 700 பேர் வரை பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.