ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி: 10 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்தியா

டில்லி:

நேபாளத்தில் நடைபெற்று வந்த தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா 10 தங்க பதக்கங்கள் உள்பட 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

8வது தெற்காசிய ஜூடோசாம்பியன்ஷிப் போட்டி நேபாள நாட்டில் உள்ள தலைநகர் காத்மாண்டு அருகில் லலித்பூரில் 21ந்தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் உள்பட 13 நாடுகளை சேர்ந்த 102 வீரர்கள் பங்குபெற்றனர்.

இதில், இந்தியா சார்பில் பங்குபெற்ற வீரர், வீராங்கனைகள் அபாரமாக விளையடி பதக்கங்களை குவித்தனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 தங்கம் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3 தங்கம் என 10 தங்க பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன.  மேலும்  3 வெண்கல பதக்கங்களையும் வென்று மொத்தம் 13 பதக்கங்களுடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது


நேபாளம் 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்களுடன் 21 பதக்கங்களை கைப்பற்றி இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதேபோன்று பாகிஸ்தான் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.