மாலத்தீவு:

தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

மாலத்தீவில் தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த சபாநாயகர் வந்துள்ளனர்.  இந்தியாவில் இருந்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமை யில்  இந்திய குழு பங்கேற்றுள்ளது.  பாகிஸ்தான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தலைமையிலான குழுவினரும் வந்திருந்தனர்.

மாநாட்டில்,, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து பாகிஸ்தான் நாட்டின் துணைசபாநாயகர் பேசினார். இதையடுத்து மாநாட்டில் பேசிய ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஸ்,  ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அதை சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் எழுப்பியதை கடுமையாக எதிர்க்கிறோம் என்று கடுமையாக சாடினார். மேலும்,  பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்வது,  எல்லை கடந்த பயங்கரவாதம் போன்றவை  தெற்காசியாவுக்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக  இருப்பதாகவும் கூறினார். இதன் காரணமாக இரு நாட்டு தலைவர்களிடையே சூடான விவாதங்கள் நடைபெற்றது.