பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல்

சென்னை :

பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் தெரிவித்தார்.

‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவி களுடன்  காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, ,’என் மனதில் உள்ள கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவே உங்களிடம்  வந்துள்ளேன்; என்னடம் சுலபமான கேள்விகளை தவிர்த்து கடினமான கேள்விகளை கேளுங்கள்’ வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய ராகுல், தமிழக பெண்களை புகழ்ந்த நிலையில், ரஃபேல், ஜிஎஸ்டி குறித்தும் பேசினார். பிரதமர் மோடியை கடுமையான சாடினார்.

நாட்டின் பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்த ராகுல்,  மத்திய அரசில் அனைத்து மாநிலத்திற்கும் பங்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். வரும் தேர்தலை தொடர்ந்து அமையவிருக்கும் மத்தியஅரசில், தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய தடையாக இருப்பது ஊழல். அனைவரும் ஒற்றுமையாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

தொடர்ந்து மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ராகுல், அப்போது ஒரு குறும்புக்கார மாணவி,  ராகுல் காந்தியை பார்த்து  ஹாய் ராகுல் கூறியது, சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பதில் அளித்து பேசிய ராகுல், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு இந்தியா குறைந்த அளவில் பணம் செலவிடுவது உண்மை தான் என்றவர், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியது அவசியம்  என்றும்,  கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து மாபெரும் வல்லரசு நாடாக மாறும் என்றார்.

மாணவி ஒருவர், மோடியை கட்டியணைத்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதில் அளித்த ராகுல்,  அரசியலை எனக்கு கற்றுக்கொடுத்ததால் மோடி மீது எனக்கு அன்பு ஏற்பட்டது என தெரிவித்தார்.

என் குடும்பத்தை பிரதமர் மோடி எப்போதும் திட்டுவார், ஆனால் அவர் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு என்றும் கூறினார்.

காஷ்மீர் குறித்த கேள்விக்கு,  2004 ஆம் ஆண்டு காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருந்தது. காஷ்மீர் இளைஞர்களை நாட்டின் மற்ற இளைஞர்களோடு இணைய செல்வதன் மூலம் தீவிரவாதத்தை குறைக்க முடியும்.

இவ்வாறு ராகுல் பேசினார்.