ஜூன் 19 முதல் 30 வரை தென் இந்தியா நடிகர் சங்கம் செயல்படாது….!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மீண்டும் தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பேட்டை மாவட்டங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 மாவட்டங்களிலும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு (Lockdown) அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 மற்றும் 28ம் ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் இந்தியா நடிகர் சங்கம் வரும் ஜூன் 30 செயல்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.