தென்னிந்திய பிலிம்பேர் விருது: சிறந்த நடிகர் விக்ரம், நடிகை நயன்தாரா

 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, நான்கு மொழிகளில் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான, 63வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா,   ஐதராபாத்தில் நடந்தது.

இதில், தமிழில் சிறந்த நடிகராக, ஐ படத்தில் நடித்த விக்ரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த படமாக, காக்கா முட்டை தேர்வானது.

விக்ரம்
விக்ரம்

ஷங்கர் இயக்கிய, ஐ படம், சிறந்த நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என, நான்கு விருதுகளை பெற்றது.

நானும் ரவுடி தான் படத்தில் நடித்த நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.

நயன்தாரா
நயன்தாரா

மற்ற விருதுகள்..

சிறந்த இயக்குனர்: மோகன் ராஜா (தனி ஒருவன்)

சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் (ஐ)

சிறந்த துணை நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)

சிறந்த துணை நடிகை: ராதிகா சரத்குமார் (தங்கமகன்)

சிறந்த விமர்சகர் விருது: ஜெயம் ரவி (தனி ஒருவன்)

சிறந்த விமர்சகர் விருது: ஜோதிகா (36 வயதினிலே)

சிறந்த அறிமுக நடிகர்: ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)

சிறந்த பாடலாசிரியர்: மதன் கார்க்கி (பூக்களே சற்று ஓய்வெடுங்கள், – ஐ)

சிறந்த பாடகர்: சித்ரா ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால், – ஐ)

சிறந்த பாடகி: ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல, – தங்கமகன்)

You may have missed