சியோல்: பட்டினியால் வாடும் வடகொரியாவிற்கு $8 மில்லியனை நிதியுதவியாக வழங்கியுள்ளது தென்கெரியா.

அணுஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும், இரண்டு கொரிய நாடுகளுக்கான பேச்சுவார்த்தையும் நின்றுபோயிருக்கும் சூழலில் இந்த உதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015ம் ஆண்டிலிருந்து, வடகொரியாவிற்கு தென்கொரியா வழங்கும் முதல் நிதியுதவி இதுவாகும். மேலும், வடகொரியாவில் கடந்த 10 ஆண்டுகளில் தற்போது வேளாண்மை பொய்த்துப் போயிருப்பதும் இந்த உதவிக்கான முக்கிய காரணம்.

இந்த உதவித்தொகை ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் வழங்கப்படும். அமெரிக்க அதிபருக்கும் வடகொரிய அதிபருக்கும் அணு ஆயுதம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.

அதுமுதல், தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வடகொரியா பெருமளவில் நிறுத்திக்கொண்டது. அதேசமயம், கடந்த மே மாத துவக்கத்தில், வடகொரிய அதிகாரியுடன் பேசியதாக தென்கொரிய அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.