லஞ்சம்: தென்கொரிய முன்னாள் பெண் அதிபரின் சிறைத் தண்டனை 25ஆண்டாக உயர்வு

சியோல்:

ஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தென்கொரியாவின் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹையின் சிறைத் தண்டனையை மேலும் ஓராண்டு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 1 ஆண்டு நீட்டிக்கப்பட்டு, அவரது சிறை தண்டனை 25 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

தெனிகொரியாவின் முதன் பெண் அதிபர் பார்க் கியூன் ஹையின். தற்போது 69 வயதாகும், அவர் லஞ்ச குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தென் கொரியாவின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனங்களை உள்ளடக்கிய ஊழலில் அவருக்குத் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக முறைகேடு நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. விசாரணையில், முன்னாள் அதிபர் பார்க்கும், அவரது நெருங்கிய நண்பரான சோய் சீன்-சைல் ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரித்து வந்த கீழ் நீதிமன்றம், பார்க் முறைகேடு செய்திருப்பதாக கூறியிருந்தது. இந்த வழக்கில், பார்க்கிற்கு   24 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

ஆனால், அரசு வழக்கறிஞர்கள், பார்க்கிற்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை   30ஆண்டாக உயர்த்தும்படியும் 105 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கும்படியும் சியோல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த  மேல் முறையீட்டு வழக்கில் சியோல்  நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, அவருக்கு மேலும் 1 ஆண்டு தண்டனையை நீட்டிப்பதாக அறிவித்தது. இதன் காரணமாக முன்னாள் பெண் அதிபர் பார்க் கியூன் ஹையின் 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது.