Random image

தென்கொரியா அதிபர் மூன் இந்தியா வந்து சேர்ந்தார்

டில்லி:

தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் தனது மனைவி, அதிகாரிகளுடன் இன்று மாலை டில்லி வந்து சேர்ந்தார். வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அவர்களை வரவேற்றார்.டில்லியில் உள்ள அக்ஷர்தம் கோவிலை   மூன் ஜே இன் பார்வையிட்டார்

மூன் 11-ம் தேதி வரை இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்தியா வந்துள்ளார். 10-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு சிறப்பான வரபேற்பு அளிக்கப்படுகிறது. அன்று மாலை விருந்து நிகழ்ச்சியும் நடக்கிறது. டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இரு நாடுகளுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரின் சார்பில் தென்கொரியா அதிபருக்கு விருந்தளிக்கப்படுகிறது.