மோடி கோட்டும் நேரு கோட்டும் : தென் கொரிய அதிபரின் தவறான டிவீட்

ஸ்ரீநகர்

நேரு கோட் என புகழ்பெற்ற உடையை மோடி கோட் என தென்கொரிய அதிபர் தவறாக குறிப்பிட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.


தென் கொரிய நாட்டின் அதிபர் மூன் ஜே இன் இந்தியாவுக்கு வந்திருந்த போது மோடி அணிந்திருந்த உடையை மிகவும் புகழ்ந்துள்ளார். மோடி அந்த உடையில் மிகவும் நேர்த்தியாக இருப்பதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார். அதை ஒட்டி மோடி தென் கொரிய அதிபரின் அளவுக்கு ஏற்றாற்போல் வடிவமக்கப்பட்ட அதே மாடல் உடையை அவருக்கு அனுப்பி உள்ளார்.

அந்த உடையை அணிந்து தென் கொரிய அதிபர் புகைப்படம் எடுத்து டிவிட்டரில் பதிந்துள்ளார். தனது பதிவில், ”எனக்கு உடல் அளவுக்கு ஏற்றார்போல் இந்திய உடையை உருவாக்கி எனக்கு இந்திய பிரதமர் அனுப்பி உள்ளார். இந்த உடை மோடி கோட் என அழைக்கப்படுகிறது. இதுகொரியாவுக்கு ஏற்ற உடை.” என தெரிவித்துள்ளார்.

இது உலகெங்கும் கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இந்தியாவில் பல்லாண்டுகளாக நேரு கோட் என அழைக்கப்பட்டு வரும் இந்த உடையை மோடி கோட் என தவறாக தென் கொரிய அதிபர் குறிப்பிட்டுள்ள்தாக பலர் விமர்சித்துள்ளனர். தென் கொரிய அதிபர் பதிவை குறித்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஒரு பதிவை வெளியிடுள்ளார்.

அவர் தனது டிவிட்டரில், “பிரதமர் இந்திய உடைகளை தென் கொரிய அதிபருக்கு அனுப்பியது ஒரு நல்ல செயலாகும். ஆனால் அந்த உடைகளின் பெயரை மாற்றாமல் ஏன் அனுப்பவில்லை? எனது வாழ்நாளில் நான் இந்த உடைகளை நேரு கோட் என மட்டுமே அறிந்துள்ளேன். ஆனால் தற்போது அது மோடி கோட் என பெயர் மாறி உள்ளது. இதில் இருந்து இந்தியாவில் 2014க்கு முன்பு எதுவுமே இல்லை என்பது தெளிவாகி உள்ளது” என பதிந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.