பள்ளி, கல்லூரிகளில் ‘காபி’ விற்க தடை: எங்கே தெரியுமா?

சியோல்:

ள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் இனி காபி  விற்ககூடாது என தென்கொரியா அரசு அதிரடி தடை விதித்துள்ளது. காபியில் உள்ள ‘காஃபின்’  என்ற வேதி பொருள்  மாணவர்களுக்கு மந்த புத்தியை ஏற்படுத்துவதால், காபி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளது.

இந்த தடை உத்தவு செப்டம்பர் 14 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

பொதுவாக சுறுசுறுப்பை ஏற்படுத்த சூடான காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவது வழக்கம். ஆனால், காபியில் உள்ள காஃபின் என்ற வேதிபொருள் காரணமாக  பள்ளி மாணவ மாணவிகளின் புத்தி மழுங்கடிப்படுவதாகவும், மாணவ மாணவிகள் தாமதமான கல்விக்கு இது காரணமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக   வரும் செப்டம்பர் 14-ம் நாள் முதல் பள்ளி கல்லூரி மற்றும் வளாகங்களிலும் காபி விற்பனைக்கு   தடை விதிப்பதாக தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே திக அளவு காபி சேர்க்கப்பட்டுள்ள காபியை  பள்ளி வளாகத்திற்குள் விற்க  2013-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இயந்திரங்கள் மூலம்  காபி விற்கப்பட்டு வந்தது.

தற்போது அதற்கும் சேர்த்து தடை விதித்து, காபி விற்பனைக்கு முழுவதுமாக தடை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரியா நாட்டு  உணவு கட்டுப்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “தேர்வு நேரங்களில் மாணவர்கள் நீண்ட நேரம் படிக்க வேண்டியுள்ளது, அப்போது அவர்களுக்கு உறக்கம் வராமல் இருக்க காபி உறுதுணையாக உள்ளது. ஆனால் காபியில் கலக்கப்படும் காஃபின் அளவு அவர்களுக்கு மந்த தன்மை யை உண்டாக்குகின்றது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி