சியோல்:

தென்கொரியா, வட கொரியா தலைவர்கள் இடையே நேற்று நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளிடையே சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக பகைமை கொண்டிருந்த இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இந்த சமரசத்திற்கு பின்னால் தென்கொரியாவின் உளவுத் துறை தலைவர் முக்கிய பங்காற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

18 ஆண்டுகளுக்கு பின்னர் தென் கொரியாவின் உளவுத் துறை அதிகாரி சுஹ் ஹூன் தென்கொரியாவின் தலைநகர் பியோங்கியாங்கிற்கு பயணம் மேற்கொண்டார். இதை தொடர்ந்து 2000ம் ஆண்டு பியோங்கியாவில் முதல் மாநாட்டை 2ம் கிம் ஜாங் நடத்தினர்.

நேற்று நடந்த மாநாட்டில் சமரசத்திற்கு 2ம் கிம் ஜாங்கின் மகன் மிக ஆர்வத்துடன் இருந்தை பார்க்க முடிந்தது. 1950&53ம் ஆண்டு நடந்த போரை தொடர்ந்து ஏற்பட்ட பிரிவிணையை அடுத்து தென் கொரியா மண்ணில் வட கொரியா தலைவர் கால் வைத்தது நேற்று தான முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியா அதிபராக மூன் பதவி ஏற்ற ஒரு வருடத்திற்குள் இந்த வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. இவர் பதவி ஏற்றவுடன் தேசிய உளவு பிரிவுத் தலைவராக சுஹ் ஹூனை நியமித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான அணு ஆயுத விவகாரத்திற்கு தீர்வு காண இவர் தான் சரியான நபர் என்று மூன் தேடி பிடித்து நியமித்தார்.

இவர் இதற்கு முன்பே இப்பதவியில் தான் இருந்தார். எனினும் 2008ம் ஆண்டில் கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி அமைந்த பின்னர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். 2000 மற்றும் 2007ம் ஆண்டுகளில் இவர் கொரிய நாடுகளுக்கு இடையிலான மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்தினார்.

மேலும், சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை, அமெரிக்காவுடனான சமரச குழுவுக்கும் ஏற்பாடு செய்து அடிக்கடி வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். வட கொரியா அதிபரான மறைந்த இரண்டாம் கிம் ஜாங்கை சந்தித்தவர் என்று அனைவராலும் அறியப்பட்டவர் தான் இந்த சுஹக் ஹூன் என்பது குறிப்பிடத்தக்கது.