சென்னை:

தென் தமிழகத்தில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தற்போது  தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக  கடுமையான வெப்பம், அனல் காற்று வீசி வருகிறது.  இன்றுடன் நிறைவு அக்னி நட்சத்திரம்  பெறுகிறது. இதற்கிடையில் வெப்பச்சலனம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில்க அவ்வப்போது மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்,   அக்னி நட்சத்திரம் முடிந்தபின் அதிகபட்ச வெயில் இருக்காது என்றவர்  தெற்கு அந்தமானில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பருவமழையானது தமிழகத்தை நெருங்கி வருகிறது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் குறையும் என்றும் கூறினார்.

இதன் காரணமாக நாளை கேரளா மற்றும் தமிழகத்தின் தென்பகுதிகளில்  தென்மேற்கு பருவமழை நிலவி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வரும் மே 31ஆம் தேதி வரை மீனவர்கள் குமரி கடல், கேரள, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கூறினார்.