டெல்லி: விதிகளை மீறி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், கட்டிடங்கள் கட்டியதாக மாமல்லபுரத்தில் உள்ள பிரபல  ரேடிசன் புளூ ஹோட்டலை இடிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல ஹோட்டல்  நிறுவனமான  ரேடிசன் ப்ளூ குழுமத்தின் ரிசார்ட் மாமல்லபுரத்தில் உள்ளது. இந்த நிறுவனம்,  விதிகளை மீறி கட்டிடங்களை கட்டியுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை இடிக்க உத்தரவிட வேண்டும்   மீனவர் நலச்சங்க தலைவர் செல்வராஜ் குமார் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த புகாரின் மீது,  தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்  விசாரணை நடத்தி வந்தது.  அதைத்தொடர்ந்து, ரேடிசன் ப்ளூ நிறுவனத்தால் கட்டப்பட்ட கட்டடங்களை 2 மாதங்களுக்குள் அந்நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஹோட்டர் நிர்வாகம் இடிக்கவில்லை என்றால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இடித்து அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

மேலும்,  சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்காக   தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு ரேடிசன் ப்ளூ நிர்வாகம் ரூ. 10 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.