ரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் நாளை முதல் திரும்ப பெறலாம் : தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை :

ரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் மாதம் 24ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வேவும் ஜூன் 30 வரை சிறப்பு ரயில்களை தவிர, பயணிகள் ரயில் எதையும் இயக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.

அதனால், மார்ச் 24ம் தேதி முதல் ஜூன் 30 வரை உள்ள மூன்று மாத காலத்தில் பயணம் செய்ய ரயில்வே நிலைய முன்பதிவு மையங்களில் நேரடியாக சென்று முன்பதிவு செய்தவர்கள் தங்கள் டிக்கெட்டுகளுக்கான பயண கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் ஏற்கனவே பணம் திரும்ப வழங்கும் பணி நடந்து வருகிறது, சென்னை மண்டலத்தில் மட்டும் வழங்கப்படாமல் இருந்தது, நாளை முதல் சென்னை மண்டலத்தில் உள்ள கீழ்காணும் முன் பதிவு மையங்களில் ரத்தான டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பு வெளியிட்டிருக்கிறது.

 

டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, திருமயிலை, மாம்பலம், செயின்ட் தாமஸ் மவுண்ட், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜா சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி ஆகிய ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

கூட்டத்தை தவிர்க்க, முன் பதிவு செய்த பயண தேதியின் அடிப்படையில் கீழ்கண்டவாறு வெவ்வெறு தேதிகளில் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

பயணம் தொடங்கும் தேதி கவுண்டர்களில் திரும்பப்பெறும் தேதி
31.03.2020 வரை 05.06.2020 முதல்
1.04.2020 to 14.04.2020 12.06.2020 முதல்
15.04.2020 to 30.04.2020 19.06.2020 முதல்
01.05.2020 to 15.05.2020 26.06.2020 முதல்
16.05.2020 to 31.05.2020 03.07.2020 முதல்
01.06.2020 to 30.06.2020 10.07.2020 முதல்