ஜூன் 29 முதல் தமிழகத்தில் ஓடும் சிறப்பு ரயில்கள் ரத்து : தென்னக ரயில்வே 

சென்னை

மிழகத்தில் இயங்கும் சிறப்பு ரயில் சேவை ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1500க்கும் அதிகமாக உள்ளது.  இதைக் கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  ஆயினும் பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது

இந்நிலையில் தற்போது ஊரடங்கு விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் தென்னக ரயில்வே மாநிலத்தினுள் சிறப்பு ரயில் சேவைகளை இயக்கி வருகிறது.  இதனால் கொரோனா பரவுதல் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.  இதையொட்டி தமிழக  தலைமை செயலர் கே சண்முகம் ஒரு கோரிக்கை விடுத்தார்.

அந்த கோரிக்கையை ஏற்ற தென்னக ரயில்வே வரும் ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை மாநிலத்தில் இயங்கும் அனைத்து சிறப்பு ரயில் சேவைகளையும் ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ரத்து செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள் விவரம் வருமாறு :

  1. திருச்சி – செங்கல்பட்டு – திருச்சி (விருத்தாசலம் வழி) தினசரி ரயில்
  2. மதுரை – விழுப்புரம் – மதுரை தினசரி ரயில்
  3. கோவை – காட்பாடி கோவை தினசரி ரயில்
  4. திருச்சி – செங்கல்பட்டு – திருச்சி (மயிலாடுதுறை வழி) தினசரி ரயில்
  5. அரக்கோணம் – கோவை – அரக்கோணம் தினசரி இண்டர்சிடி ரயில்
  6. கோவை – மயிலாடுதுறை – கோவை ஜனசதாப்தி ரயில்
  7. திருச்சி – நாகர்கோவில் = திருச்சி தினசரி ரயில்