சுத்தம் செய்யும் பணியை ரத்து செய்யும் தென்னக ரெயில்வே முடிவில் மாற்றம்

சென்னை

டும் ரெயில்களில் சுத்தம் செய்யும் பணியை ரத்து  செய்யும் முடிவை தென்னக ரெயில்வே மற்றிக் கொண்டுள்ளது

ஓடும் ரெயிலில் சுத்தம் செய்தல், போர்வைகள் அளித்தல். பூச்சி மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளைத் தென்னக ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் மூலம் நடத்தி வருகிறது. இதற்காக மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் இந்த தொகை ஒப்பந்த தாரர்கள் கட்டணத்தை முழுமையாக அளிக்க போதுமானதாக இல்லை.

தென்னக ரெயில்வேவின் வருமானம் மிகவும் குறைவாக உள்ளதால் அந்த  பற்றாக்குறையை ஈடு செய்ய முடியவில்லை. எனவே செலவைக் குறைக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டது. அதில் முதல் படியாக வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 70 ரெயில்களில் ஓடும் போது சுத்தம் செய்யும் பணியை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பயணிகள் இடையே கடும் அதிருப்தி உண்டானது. தற்போது  ஓடும் ரெயிலில் சுத்தம் செய்யும் பணிகளால் ரெயில் பெட்டிகள் சுத்தமாக உள்ளதாகவும் இதை ரத்து செய்யக் கூடாது எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே தென்னக ரெயில்வே தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.

முன்பு அறிவித்தபடி ஓடும் ரெயிலில் சுத்தம் செய்யும் பணிகளை ரத்து செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளது. இந்த  விவகாரத்தில் ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலையிட்டுத் தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்தை ஒட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.