நெல்லை மற்றும் கோவையிலிருந்து ஜபல்பூர்க்கு வாராந்திர சிறப்பு ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு

சென்னை:

யில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், நெல்லை மற்றும் கோவையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.

தற்போது நாடு முழுவதும் தசரா பண்டிகை தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று வரிசையாக விழாக்கள் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அவர்கள் ஊருக்கும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து  சொந்த ஊருக்கும் திரும்புவார்கள். இதன் காரணமாக ரயிலில் கூட்ட நெரிசல் ஏற்படும்.

இதை தவிர்க்கும் நேக்கில், திருநெல்வேலி மற்றும் கோவையிலிருந்து தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக  அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருநெல்வேலியில் இருந்து வாரந்திர சிறப்பு ரயில் கோவில்பட்டி, திருச்சி, நெல்லூர் வழியாக ஜபல்பூர் வரை இயக்கப்படும் என்றும், வருகின்ற 13-ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கோவையில் இருந்தும் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, உடுப்பி, கடர்வாரா வழியாக ஜபல்பூர் வரை சிறப்புத் தொடர்வண்டி இயக்கப்படுகிறது.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.