ஆறு மாதங்களில் 15% அதிக வருவாய் ஈட்டிய தென்னக ரெயில்வே

சென்னை

ந்த நிதியாண்டில் தென்னக ரெயில்வே செப்டம்பர் வரை 15% அதிக வருவாய் ஈட்டி உள்ளதாக மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரெயில்வேயில் தென்னக ரெயில்வேயின் சேவை சிறப்பாக உள்ளதாக நாடெங்கும் உள்ள பயணிகள் தெரிவிக்கின்றனர். தற்போது தென்னக ரெயில்வே மேலாளராக குல்ஸ்ரேஸ்தா பணி புரிந்து வருகிறார். இன்று இவர் ரெயில் பார்ட்னர் என்னும் செயலியை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.

குல்ஸ்ரேஸ்தா, “ஆளில்லா ரெயில்வே கேட் குறித்து புகார்கள் எழுந்தன. அதை ஒட்டி ஆளில்லா ரெயில்வே கேட் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த ஆறு மாதங்களில் 17.73 டன் சரக்குகளை தென்னக ரெயில்வே கையாண்டுள்ளது. அத்துடன் 42.2 கோடி பேர் ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிதியாண்டில் இந்த ஆறு மாதங்களில் தென்னக ரெயில்வே 15% கூடுதல் வருமானம் ஈட்டி உள்ளது. 52 ரெயில் நிலையத்தில் வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நிர்பயா நிதியின் கீழ் 6 ரெயில் நிலயங்களில் சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டுள்ளது.”