சவுதி அரேபியா:

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண்கள், அந்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் போக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.


வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதற்கு ஒவ்வொரு பெண்ணும் வெவ்வேறு காரணங்களை சொன்னாலும், அந்நாட்டின் இஸ்லாமிய சமூக விதிமுறைகள் கடுமையாக இருப்பதோ பொதுவான காரணமாக கருதப்படுகிறது.

எங்களை அசையா சொத்து போன்று தான் அரசு நடத்துகிறது என்ற குற்றச்சாட்டும் பெண்களால் வைக்கப்படுகிறது. கடுமையான சட்ட திட்டங்களுக்கு, சமூக வலைதளங்களில் ஈடுபாடுள்ள பெண்கள் கட்டுப்படுவதில்லை என்பதே தற்போதைய நிலவரம்.

பெரும்பாலான பெண்கள் சவுதியின் சுற்றுலாதளமான துருக்கியிலிருந்து ஜார்ஜியாவுக்கு செல்கின்றனர். ஜார்ஜியா செல்ல விசா தேவையில்லை. பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளுக்கு செல்கின்றனர்.
அந்த நாடுகளுக்கு சென்று குடியுரிமைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். மனித

உரிமை குழுக்கள் உதவியுடன் சில நாடுகளில் அவர்களுக்கு எளிதாக தஞ்சம் கிடைத்து விடுகிறது.
சவுதி சட்டப்படி, ஒரு பெண் கல்வி கற்கவோ, வேறு காரணத்துக்காகவோ வெளிநாடு செல்லவேண்டும் என்றால், தந்தை, கணவன் அல்லது மகன் பாதுகாவலராக இருந்து அனுமதி தரவேண்டும். அப்போது தான் சவுதி அரேபியா அரசும் அனுமதிக்கும்.

தங்கள் பாதுகாவலர் போல் பெண்களே விண்ணப்பித்து, அரசிடம் அனுமதி பெற்று தப்பியோடும் சம்பங்களும் நடக்கின்றன.

சரியாக உடை உடுத்தவில்லை போன்ற சிறு காரணங்களுக்காக உள்ளூர் போலீஸ் பெண்களை துன்புறுத்துவது சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரும் பெண்களுக்கான சுதந்திர வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் வகையில், பெண்கள் கார் ஓட்ட அனுமதித்தார்.
இதனையடுத்து ஏராளமான பெண்கள் கார் ஓட்ட பயின்று வருகிறன்றனர். பெண்கள் பாதுகாவலர் சட்டம் குறித்து இளவரசர் முகமது பின் சல்மானிடம் கேட்டபோது, குடும்பத்தினரையும் கலாச்சாரத்தையும் பாதிக்காத வகையில் இந்த சட்டம் கையாளப்படும் என்றார்.
இளவரசரின் அணுகுமுறை மாற்றம் பெண்கள் மத்தியில் வரவேற்பை கொடுத்துள்ளது. திருமணம், கல்வி, மருத்துவம் போன்றவற்றுக்கு பாதுகாவலரின் அனுமதியை பெறுவது எளிதாகிவிட்டது.
ஆண் உறவினர்களின் அத்துமீறல், சமூக ஊடகங்களின் தொடர்பு ஆகியவை மூலம் சவுதி அரேபியா பெண்கள், எளிதாக வெளிநாடுகளுக்கு சென்று, தஞ்சம் அடைகின்றனர். தஞ்சம் அடைவதை கல்வி கற்கவும், வேலை பார்க்கவும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.