ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்! வானிலை ஆய்வு மையம்

சென்னை,

மிழகத்தில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 2,3 நாளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று வானிலை மைய இயக்குநர் பாலகிருஷ்ணன் கூறினார்.

இன்று செய்தியாளர்களிடம் கூறிய இயக்குநர் பாலகிருஷ்ணன், தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 2 அல்லது 3 நாளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும்,  பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என்றார்.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.