தென்மேற்கு பருவமழை படிப்படியாக வரும்! வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்

சென்னை:

மிழகத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான சாரல் மழை பெய்து வரும் நிலையில், படிப்படியாக தென்மேற்கு பருவழை வரும் என்று சென்னை  வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு பருவமழை தீவிரமடையாததாலேயே  கோடை வெப்பம் வாட்டி வதைத்ததாகவும் தெரிவித்து உள்ளார்.

தமிகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்த பிறகும், கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இந்த மாதத்திலும் கடந்த 20 நாட்களாக கடுமையான வெப்பக்காற்று வீசியது. இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்தனர். ஆனால், நேற்று முதல் சென்னை உள்பட சில மாவட்டங்களில் லேசான மழை தூறி வருகிறது. இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் , பொதுவாக தமிழகத்தில் ஆண்டு தோறும் தென்மேற்குப் பருவ மழை என்பது ஜூன் 8ம் தேதி வாக்கிலேயே தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு வாயு புயல் காரணமாக தென்மேற்குப் பருவ மழை தீவிரமடையாமல் போனது.

சுமார் 14 நாட்கள் அது தடைபட்ட காரணத்தால் தமிழகத்தில் வறட்சியான காலநிலை காரணமாக கடுமையான வெப்பம் நிலவியது என்று தெரிவித்துள்ளார். படிப்படியாக தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவ மழை நகர்ந்து வரும் என்றும் தெரிவித்து உள்ளார்.