Random image

தென்மேற்கு பருவமழை தீவிரம்: தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை:

தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும்  வெப்பச்சலனம் காரணமாக பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சுட்டெரித்த வெயில் குறைந்து குளிந்த காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை இன்று முதல் தீவிரமடைய இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் தற்போது கோவை, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்களிலும் அவ்வப்போது பெய்கிறது. இனி தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

இதன் காரணமாக கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ள தாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை பகுதிகளில் அடுத்த  2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும்,  மற்ற மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் மிக கனமழை பெய்யக் கூடும் மேலும் சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உள்ளிட் டோர் கவனமாக இருக்கும்படி என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

லட்சத்தீவு அருகே உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு, 35 முதல் 60 கி.மீ., வேகத்தில் மேற்கு நோக்கி காற்று வீசக்கூடும் எனவும். மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு மலப்புரம், கன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் இதனால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13 முதல் அனைத்து இடங்களுக்கும் உஷார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.