ராஜஸ்தானில் தென்மேற்கு பருவமழை ஜூன் 21ந்தேதிக்குள் தொடங்கும்! இந்திய வானிலை மையம்

டில்லி:

‘ராஜஸ்தானில் தென்மேற்கு பருவமழை ஜூன் 21ந்தேதிக்குள் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தெற்கு கொங்கன் ஏரியா, மகாராஷ்டிரா மாநிலம்  மற்றும் கோவாவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்  தெரிவித்து உள்ளது.

ஜூன் 24, மற்றும் 25ந்தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை பெய்யும் என்றும் கூறி உள்ளது. அதே வேளையில், தற்போது நீர் நெருக்கடியின் கீழ் உள்ள மராத்வாடா மற்றும் விதர்பா போன்ற வளைந்த பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு பருவமழை தொடங்க தாமதங்கள் இருந்தாலும், கர்நாடகா, தமிழகத்தின் மீதமுள்ள பகுதிகள் மற்றும் தெலுங்கானா, ஒடிசா மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளை இந்த மாத இறுதிக்குள் மழை தொடங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், குஜராத் மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உள்ள கட்ச் மற்றும் சவுராஷ்டிராவின் சில பகுதிகளில் நாளைக்கு பரவலாக பலத்த மழை பெய்யும் “என்றும்,  அடுத்த இரண்டு நாட்களில் மும்பை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், கொங்கனில் அதிக தீவிர மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், காற்றின் போக்கின் காரணமாக தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் ஒரு வாரம் தாமதமாகி உள்ளதாகவும், ஆனால்,  அது வேகமாக முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பருவ மழையான  வறண்ட பிராந்தியத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்  என்றும்,  ஜூன் 21 க்குப் பிறகு பருவமழையின் முன்னேற்றம் விரைவாக இருக்கும். ஜூலை 4 ஆம் தேதிக்குள் மழைக்காலம் நாட்டின் 90 சதவீதத்தை எட்டும் என்றும் நம்பிக்கை தொரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.