தென்மேற்கு பருவமழை: என்ன சொல்கிறார் வானிலை மைய இயக்குநர் ?

சென்னை:

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் வழக்கத்தை விட 29% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென்மேற்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் வழக்கத்தை விட 29% கூடுதலாக பெய்துள்ளது என கூறனார்.

மேலும், கன்னியாகுமரி, காரைக்காலில் இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். பருவ மழைக்காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 41 செ.மீ மழை பதிவாகியுள்ளது

தென்மேற்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் வழக்கத்தை விட 29% கூடுதலாக பெய்துள்ளது என்றும் கூறினார்.

ஏற்கனவே கடந்த 25ந்தேதி செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர்,  ஜூன் 1 ம் தேதி முதல் செப் 25 வரை 39 செ.மீ., மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 31 சதவீதம் அதிக மாகும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.