சவரன் ரூ.31,624: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

சென்னை:

சென்னையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உள்ளது. இன்றையை விலை ரூ.31,624 ஆக உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருகிறது.

இன்று  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ஒரு கிராமுக்கு ரூ.27 அதிகரித்து ரூ.3,953க்கு விற்பனையாகிறது. 22 கேரட்  தங்கத்தின் விலை ஒரு சவரன் தங்கம் விலை ரூ.216 அதிகரித்து, ரூ.31,624க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும்,  தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,512 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.51.60க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.51.600-க்கும் விற்கப்படுகிறது.