ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த எஸ்.பி.பி, உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் எஸ்.பி.பி காலமானார் .

ரசிகர்கள்,பிரபலங்கள் என்று இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. எஸ்.பி.பி குறித்த தங்கள் நினைவுகளையும்,இரங்கல்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

SPB-யின் பண்ணைவீட்டில் அவரது இறுதி சடங்குகள் அரசு மரியாதையோடு நடைபெற்றது. தமிழக அரசு அறிவித்தபடி 72 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் எஸ்.பி.பி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவக்கட்டணம் குறித்து வெளியான வதந்திக்கு அவரது மகன், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தொடர் செயற்கை சுவாசம் கொடுக்க முடியாததால் எஸ்.பி.பி.சரணிடம் அனுமதி பெற்று டிரக்யாஸ்டமி செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

டிரக்யாஸ்டமி சிகிச்சை தொண்டை பகுதியில் செய்யும் சிகிச்சையானதால் தற்காலிகமாக பேசமுடியாமல் போகலாம். இதை வெளியில் சொன்னால் இனி அவரால் பாட முடியாதா என்று மக்களிடம் அச்சம் வரும் என நினைத்து வெளியே சொல்லவில்லை என்று எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.