என்னுடைய தந்தையின் மாபெரும் வெற்றிக்கே இந்த கூட்டணி : அகிலேஷ் யாதவ்

க்னோ

மது தந்தை முலாயம் சிங் யாதவ் மாபெரும் \வெற்றி பெற சமாஜ்வாதி கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தது என அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க தீர்மானித்தன. ஆனால் அந்த தீர்மானத்தில் இருந்து விலகிய சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் கூட்டணியை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இந்த இரு கட்சிகளும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் தலா 38 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. அத்துடன் இந்த கூட்டணி மற்ற மாநிலங்களும் தொடர உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் தந்தையும் நேதாஜி என அழைக்கப்படும் அக்கட்சியின் அமைப்பாளருமான முலாயம் சிங் யாதவ் இந்த கூட்டணிக்கு அண்மையில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது மக்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“இந்த கூட்டணி குறித்து அறிவிக்கும் முன்னர் நான் எனது தந்தையும் உங்களால் நேதாஜி என அன்புடன் அழைக்கப்படுபவருமான முலாயம் சிங் யாதவை சந்தித்து அவர் ஆசியைப் பெற்றேன். அப்போது அவரிடம் இரு கட்சிகளும் தொகுதிகளை சமமாக பகிருவதாக உள்ளதாக தெரிவித்தேன். அதற்கு அவர் நமது கட்சி வலுவாக உள்ளதால் பாதி தொகுடிகள் நமக்கு கிடைத்துள்ளன என மகிழ்ச்சியை தெரிவித்தார்.

இந்த கூட்டணியை நான் ஏற்றதற்கு முக்கிய காரணம் எனது தந்தையின் வெற்றி தான். அதுவும் நேதாஜி ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் இந்த மக்களவை தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்னும் கட்சி தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் எண்ணம் கொண்டுள்ளேன். வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. விரைவில் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்படும்.

கடந்த ஒரு வருடமாகவே கட்சியின் தலைவர்கள் தேர்தல் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் கட்சியின் வெற்றிக்காக பாடுபட தயாராக உள்ளனர். எனவே பலரும் கூறுவது போல் தேர்தல் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறுவது தவறானதாகும். ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகள் காங்கிரசுக்காகவும் மதுரா மற்றும் கைரானா தொகுதிகள் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.