பல்பூர்

ஷொமட்டோவில் இஸ்லாமியர் உணவு அளித்ததால் ஆர்டரை கேன்சல் செய்த அமித் சுக்லாவுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஜபல்பூரை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் ஷொமட்டோ மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.   அவருக்கு வந்த செய்தியில் இருந்த உணவு அளிப்பாளர்  பெயரைக் கொண்டு அந்த ஊழியர் இஸ்லாமியர்  என தெரிந்துக் கொண்டார்.   இஸ்லாமியர் உணவு அளிப்பதை தாம் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அதனால் தமது ஆர்டரை ரத்து செய்தார்.

ஷொமட்டோ நிறுவனம் உணவு விவகாரத்துக்கும் மதத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை  என அமித் சுக்லாவுக்கு பதில் அளித்தது.  அத்துடன் அவர் ரத்து செய்த ஆர்டருக்கான பணத்தை திருப்பி தர இயலாது எனத் தெரிவித்தது.  இது குறித்து அமித் சுக்லா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.   அதற்குப் பல விமர்சனங்கள் எழுந்தன.   இந்த பதிவு பலராலும் பதியப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜபல்பூர் நகர காவல்துறை சூப்பிரண்ட் அமித் சிங், “நாங்கள் உணவு  அளிப்பவரின் மதத்தை காட்டி ஆர்டரை கேன்சல் செய்த அமித் சுக்லாவுக்கு நோட்டிஸ் அனுப்ப உள்ளோம்.  மேலும் அவர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக டிவிட்டரில் பதியக் கூடாது  என எச்சரிக்கிறோம். மீ?றினால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  அவர் தற்போது கண்காணிப்பில் உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.