விண்வெளி ஆய்வுக்காக முப்பது மீட்டர் தொலைநோக்கி உருவாக்கப்பணி மீண்டும் ஆரம்பம்

வாய் தீவில் உள்ள மலையின் மீது உலகின் பிரமாண்டமான முப்புது மீட்டர் தொலைநோக்கி உருவாக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த மலையில் உள்ள தேவாலயத்தின் புனிதம் கெட்டுவிடும் என்று உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

எங்கள் கடவுளை நாங்கள் வணங்குவதையில் தடை செய்வது தவறு என்று புரியவில்லை என்று மக்கள் தொடர்ந்து பெரும் போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் ஆய்வாளர்களோ மலையின் மீது தொலைநோக்கியை அமைக்கும்போது  குறைந்த காற்று, குறைந்த காற்று மாசு போன்ற காரணங்களால் வானத்தினை நம்மால் தெளிவாக அலச முடியும் என்று வாதிட்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில் மீண்டும்  தொலைநோக்கி உருவாக்கப்பணி ஆரம்பிக்கப்பட உள்ளது

இதன் மூலம் 13 மில்லியன் ( 1300 கோடி வருட ) பின்நோக்கி பயணப்பட முடியும் என்றும் என்றும் இதன் மூலம் பல விண் வெளி மர்மங்கள் நீங்கும். புதிய தகவல்கள் கிடைக்கும் என்றும் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இந்த தொலைநோக்கியானது கலிபோர்னியா மற்றும் கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் ஒரு குழு தொலைநோக்கி நிறுவனத்தை உருவாக்குகிறது, இதில் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்களிப்பும் உள்ளது

. கருவியின் முதன்மை கண்ணாடி 98 அடி (30 மீட்டர்) விட்டம் அளவிடும். உலகில் தற்போதுள்ள மிகப் பெரிய புலப்படும் ஒளி தொலைநோக்கியுடன் ஒப்பிடும்போது, இது மூன்று மடங்கு அகலமாகவும், ஒன்பது மடங்கு அதிகமாகவும் இருக்கும்.

முப்பது மீட்டர் தொலைநோக்கி பற்றி மேலும் அறிய கீழ்கண்ட முகவரிக்கு செல்லலாம்

https://www.tmt.org/

-செல்வமுரளி

கார்ட்டூன் கேலரி