சென்னை,

ண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன்  அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது சட்டமன்றத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியதாவது,

தமிழகத்தில் உயர்கல்வி மன்றம் சார்பில் 5 தனிச்சிறப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் வகுக்கப்படும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும்

சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை அறிவியல் மற்றும் உயிரி தொழிநுட்ப மையம் அமைக்கப்படும் என்றார்.

இதேபோல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய உயர்கல்வி திட்டத்தின் நிதியுதவி யுடன் Wi-Fi வசதி அமைக்கப்படும்.

மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேரும் திருநங்கைகளுக்கு இலவசகல்வி வழங்க திட்டம் செயல்படுத்தப்படும். நன்றாக படிக்கும் திருநங்கைகளுக்கு ரூ.3000 உதவி தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.