கப்பல் மீது ராக்கெட் பூஸ்டர் ஸ்டேஜ் தரையிறக்கம்: ஸ்பேஸ்-எக்ஸ் சாதனை

spacex-barge-1024x577

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பால்கான் 9 ராக்கெட்டின் முதல் நிலையை அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு மிதக்கும் ட்ரோன் (Drone) கப்பல் மீது வெற்றிகரமாக தரையிறக்கி ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) நிறுவனம் சாதனைப் படைத்துள்ளது. ” அஃப்கோர்ஸ் இ ஸ்டில் லவ் யூ” என்று பெயரிடப்பட்ட ஆளில்லா ட்ரோன் கப்பலில் ஸ்பேஸ்-எக்ஸின் ஐந்தாவது முயற்சியில் பால்கான் 9 ராக்கெட்டின் ஒரு பூஸ்டர் ஸ்டேஜ்ஜை இறக்கி வரலாறு படைத்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஸ்பேஸ்-எக்ஸிற்கு மட்டுமல்லாது வளிமண்டல ஊர்தி இனத்திற்கேச் சாரும்.

space x 4

ராக்கெட் பூஸ்டர்களை வெற்றிகரமாக மீட்டு மீண்டும் பயன்படுத்துவது மக்களையும் ராக்கெட்டுகளையும் விண்ணில் அனுப்புவதற்கு ஆகும் அதிக செலவுகள் குறையும். நிறுவனம் டிசம்பர் மாதம் கேப் கார்னிவலில் பால்கான் 9 முதல் நிலை பூஸ்டர்களில் ஒன்றை வறண்ட நிலத்தில் வெற்றிகரமாக இறக்கியது, ஆனால் அதன் இறங்கும் அமைப்புகளின் செயல்பாடு மற்றும் அந்த ராக்கெட் மீட்பு உண்மையில் சாத்தியமானதே என்பது நிரூபிக்கப்பட்ட நிலையில், பிரத்தியேகமாக மிகவும் சவாலான ட்ரோன் கப்பல் மீது இறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

space x 5

முதல் கட்ட ராக்கெட் பூஸ்டர்களை மீட்டு மீண்டும் உபயோகப்படுத்தி வழக்கமான மற்றும் ஒப்பீட்டளவில் மலிவான விண்வெளி வெளியீட்டு சேவைகளை வழங்க வேண்டும் என்ற தன்னுடைய நீண்டகால குறிக்கோளை அடைய இத்தகைய ட்ரோன் கப்பல் இறக்கம் ஸ்பேஸ்-எக்ஸ்ற்கு அவசியம்.

அதிக கோளப்பாதைகளுக்கான பயணங்களுக்கு மிக வேகமாகவும் தொடங்கிய இடத்திலிருந்து மிக அதிக தூரமாகவும் பயணித்து பூமியில் இறங்குவதற்கான சாத்தியமுள்ள ராக்கெட்டுகள் தேவைப்படும்.

space x 4

முதல் நிலையை வெற்றிகரமாகக் கடந்து மீண்டும் வெளியீட்டு தளத்திற்கு
வந்தடையும் அளவிற்கு அதிகமாக கூடுதல் எரிபொருள் தேவை (நிலத்தை விட கடலில் ராக்கெட்டுகளைத் தரையிறக்குவது பாதுகாப்பானது தான், ஏனெனில், நிலத்தில் “கொஞ்சம் தவறினால்” கூட அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகளில் பாதிப்பு ஏற்படுத்தும்) .

spacex 1

இந்தத்  தரையிறக்கம் ஸ்பேஸ்-எக்ஸின் ஒரு வரலாற்று மைல்கல்லை குறிக்கிறது என்றாலும், இந்த ஆண்டில் 18 ராக்கெட்டுக்களை விண்ணில் செலுத்தம் லட்சிய இலக்கு சந்திக்க விரும்புகிறது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் 2016ல் மூன்றாவது வெளியீட்டை குறிக்கிறது இன்றைய வெளியீடு. அப்படி என்றால் நிறுவனத்திற்கு இன்னும் 15 ராக்கெட்டுகளை வெளியிடும் வேலைகள் உள்ளது என்பதும் அதற்கு வெறும் ஒன்பது மாதங்களுக்கு குறைவான கால அவகாசம் உள்ளதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

space x 3