ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய கார்கோ  விண்கலன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை  சென்றடைந்ததாக நாசா தெரிவித்து உள்ளது.

கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்க்கன் ஏவுகலம் மூலம் டிராகன் என்ற சரக்கு விண்கலம் புளோரிடா ஏவுதளத்தில் இருந்து  விண்ணுக்கு ஏவப்பட்டது. இது 10 நிமிடங்களில் பூமியில் இருந்து 340 கிமீ தூரத்துக்குச் சென்றது. விண்வெளி நிலையத்தைச் சென்றடைய 2 நாட்கள் வரை எடுக்கும் என அறிவிக்கப்பட்டது,.

அதன்படி  கடந்த 5ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலனை புளொரிடாவின் கேப் கனவெரலில் இருந்து ஏவியது. அதன்மூலம்  சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ளவர்களுக்கு தேவையான  சுமார் 5,500 எல்பிஎஸ். ( 2,495 kilograms)  எடையுடைய பொருட்களுடன்  சென்ற இந்த விண்கலன் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது.

இதனை விண்வெளி மையத்தில் இருக்கும் கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி யாளரான சைண்ட் ஜாக்ஸ் வெற்றிகரமாக தங்களுடன் இணைத்துக் கொண்டார். இந்த விண்கலன் கிட்டதட்ட ஒரு மாத காலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்திருந்து பின்னர் பூமிக்கு திருப்பி அனுப்பப்படும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் வீடியோவை காண கீழே உள்ள இணையதளத்தை கிளிக் செய்யவும்..

https://www.space.com/spacex-dragon-space-station-arrival-nasa-crs17.html