Random image

ஸ்பெயின் : கல்வி சர்ச்சையை தொடர்ந்து சுகாதார அமைச்சர் விலகம்

மாட்ரிட்

ஸ்பெயின் நாட்டின் பெண் சுகாதார அமைச்சர் கார்மென் மாண்டனின் கல்வி தகுதியை குறித்து சர்ச்சை எழுந்ததால் பதவி விலகி உள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையில் உள்ள அமைச்சரவையில் பெண் அமைச்சரான கார்மென் மாண்டன் சுகாதாரத்துறை யை கவனித்து வருகிறார்.   இவர்  கடந்த 7 வருடம் முன்பு மாட்ரிட் நகரில் உள்ள கிங் ஜுவான் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.

இவர் தனது முதுகலைப் பட்டம் பெற பல முறை கேட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியான மக்கள் கட்சியினர் புகார் கூறி உள்ளனர்.    இது குறித்து ஸ்பெயின் நாட்டு உச்சநீதிமன்றம் விசாரணை தொடங்கி உள்ளது.   அதனால் கார்மென் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

அந்த போராட்டத்தை ஒட்டி தாம் பதவி விலகுவதாக கார்மென் அறிவித்துள்ளார்.   அத்துடன் பிரதமர் பெட்ரோ தமக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.   பிரதமரும் இவரை பாராட்டி தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.